Kogilavani / 2021 மார்ச் 08 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம் கீழ்ப்பிரிவு, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடங்கள் பழமையான கத்தியொன்று காணாமல் போனமையால் தோட்டத்தில் பதற்றமான சூழலொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த கத்தி கிடைக்கும்வரை தாம் பணிக்குச் செல்லப்போவதில்லை என்று தெரிவித்து தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 8 பேரை கைதுசெய்துள்ளதுடன்.
கோவில் திருவிழாவை நடத்துவதுத் தொடர்பில் நேற்று (8) நடைபெற்ற கூட்டத்தின்போது, கத்தி காணாமல் போனமை தொடர்பில் தோட்ட மக்கள் கோவில் கமிட்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் கோவில் கமிட்டியினருக்கும் தோட்ட மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தோட்டமக்கள், இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தோட்டத்துக்கு விரைந்துச்சென்ற நோர்வுட் பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைதுசெய்துள்ளனர்.
கோவிலிருந்த பழமைவாய்ந்த கத்தி, பூஜையொன்றுக்காக மஸ்கெலியா சாமிமலைப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் அந்தக் கத்தி மீண்டும் கொண்டுவரப்படவில்லை என்பதுடன், அந்தக் கத்திக்குப் பதிலாக புதிய கத்தியொன்றே கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026