Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கித்துல்கலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டை நோக்கி ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து , எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கரவனெல்ல மற்றும் கித்துல்கலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து புதன்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர் திசையில் வந்த லொறி,வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் , அவர் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என். ஆரச்சி
24 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
39 minute ago