Kogilavani / 2021 மார்ச் 05 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை நகரில், நேற்று இரவு (4) லொறியொன்றில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என்று, திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
\கொட்டகலை வூட்டன் பகுதியைச் சேர்ந்த இராமசாமி இராஜலிங்கம் என்பவரே ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறியொன்று, கொட்டகலை வூட்டன் பகுதியில், வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியை பத்தனை சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், லொறியின் சாரதி, லொறியை மீண்டும் ஹட்டன் நோக்கி செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்து, கொட்டகலை நகரின் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லொறியை, சில தரப்பினர் சேதப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதி, திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தில் பின்னர் சரணடைந்துள்ளதுடன், அவரை இன்றைய தினம் (5) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026