Sudharshini / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, ரதல்ல குறுக்கு பாதை சமர்செட் தோட்டத்துக்கு அருகில் திங்கட்கிழமை (01) இரவு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேடுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து நுவரெலியா, அம்பேவெல பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சிவனொளிபாதமலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த மேற்படி பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மண்மேடுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago