2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வாகனங்களில் முன் விளக்கை ஒளிரவிடவும்

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மலையகத்தில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரியுள்ள பொலிஸார்,  வானங்களில் முன்விளக்கை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

மலையகத்தில் நேற்று (7) காலை வேளையில் அதிக பனிமூட்டம் காணப்பட்டதால்  சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் இடர்களை எதிர்கொண்டனர். குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேனை, கொட்டகலை, நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .