2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விசேட கலந்துரையாடல்

Sudharshini   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமசந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தினருடனான விசேட கலந்துரையாடல், டிக்கோயா, தரவளை திருவள்ளுவர்புரத்தில் நடைபெற்றது.

கழகத்தின் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, மலையக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் சாராத தனியார் மற்றும் அரசதுறை சார்ந்தோருக்கான வீடமைப்புத்திட்டம், மலையக தமிழர் என வாக்காளர் இடாப்பில் பதியப்படவேண்டியதன் அவசியம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வழிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .