2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

புதுடெல்லி, இந்திய கலாசார உறவுகளுக்கான சபை, இலங்கை மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் வழங்க முன்வந்துள்ளது.  
இதற்கான விண்ணப்பங்களை, கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் கோரியுள்ளது.  

நுண்கலை, சங்கீதம், நடனம் மற்றும் ஓவியம் ஆகியத் துறைகளில், டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ளன 20-25 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம்.  

க.பொ.த. உயர்தரத்தில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய பாடங்களில் ‘பீ’ சித்தி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.   

அத்துடன், க.பொத. சாதாரணதரம் அல்லது உயர்தரத்தில் ஆங்கில பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

விண்ணப்பப்படிவங்களை, கண்டி இந்திய உதவித் தூதரகம், 31, ரஜபிஹில்ல மாவத்தை, கண்டி என்ற முகவரியில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.  மேலதிக விவரங்களுக்கு 081-2222652, அல்லது 081-2223786 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .