Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் கல்வி நம்பிக்கை நிதியத்தின் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த புலமைப்பரிசில்கள், க.பொ.த உயர்தரத்தில் கல்விப் பயில்வோருக்கும் பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை தொடர்வோருக்கும் இலங்கை அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கும் வழங்கப்படவுள்ளன.
க.பொ.த. சாதரணத் தரத்தில் குறைந்தது 6 திறமைச்சித்திகள் அல்லது க.பொ.த உஃத சித்தியடைந்த 25 வயதிலும் குறைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரிகள் தமது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன், பிறப்பு அத்தாச்சி பத்திரம், க.பொ.த உஃத,
க.பொ.த சாஃத பெறுபேற்று சான்றிதழ்கள், பெற்றோரின் கடைசி மாத சம்பள பற்று சீட்டு, பெற்றோரின் தொழிலை உறுதிப்படுத்தும் தோட்ட அதிகாரியின் கடிதம் என்பவற்றின் நிழல் பிரதிகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயம், 36-38 காலிவீதி, கொழும்பு-03 மற்றும் உப-இந்திய உயர்ஸ்தானிகராலயம், ரஜபில்ல மாவத்தை, கண்டி என்ற முகவரியில் பெற்றுகொள்ளலாம். அல்லது www.hoicolombo.org என்ற இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பதாக, Honorary Secretay, CEWET c/o High commission & India P.o.Box 882, Colombo 03, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
4 minute ago
16 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
28 minute ago