2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலை குப்பைகளால் பிரதேச மக்கள் அச்சம்

Sudharshini   / 2016 ஜூன் 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

கடந்த இரண்டு வருடங்களாக, டிக்கோயா - கிளங்கன் ஆதார     வைத்தியசாலையில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், பொகவந்தலாவை, டொனக் தேயிலைத் தோட்ட மேற்பிரிவில் கொட்டப்படுவதனால், தாம் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையிலுள்ள குப்பைகள், அம்பகமுவ பிரதேச சபைக்குச் சொந்தமான சுகாதார பிரிவின் வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டே, மேற்படி தோட்டத்தில் கொட்டப்படுகின்றன. பிளாஸ்திக் போத்தல்கள், ஆடைகள் என்பன  இங்கு கொட்டப்படுவதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில், டிக்கோயா ஆதார  வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆர்.ராஜேந்திரனிடம் வினவியபோது, 'இவ்வாறான குப்பைகளை பொறுப்பேற்பது அம்பகமுவ பிரதேச சபையின் பொறுப்பாகும்.  வைத்தியசாலையில் சேரும் குப்பைகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து  அம்பகமுவ பிரதேச சபையில்  ஒப்படைப்பது எங்களது பொறுப்பாகும். இனிவரும், காலங்களில் அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .