2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வைத்தியர், ஊழியரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2016 ஜனவரி 17 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

பதுளை, கஹடருப்ப கிராமிய வைத்தியசாலையின் வைத்தியரொருவரையும் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மூவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியதாக கூறப்படும் நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபர் அதிகமாக மதுபானம் அருந்தியதுடன் சுயநினைவு அற்ற நிலையில் கடந்த (15) ஆம் திகதி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பிய நபர், தனக்கு வழங்கப்பட்டிருந்த ஒட்சிசன் மற்றும் சேலைன் ஆகியவற்றை பிடிங்கி எறிந்துள்ளதுடன் அடித்து நொறுக்கியுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை பணியாளர்கள்; மேற்படி நபரின் கை, கால்களை கட்டி வைத்துள்ளனர்.  மீண்டும் சிகிச்சை அளிக்க சென்ற வைத்தியரை அந்நபர் தாக்கியுள்ளதுடன் கடமையிலிருந்த பணியாளர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம், தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் சனிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன் நீதவான் முன்னிலையிலும் ஆஜர்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .