2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சாரதி பலி

Kogilavani   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்று கொஸ்கம, 46ஆவது மைல்கல் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் வைத்து நேற்று  புதன்கிழமை (23) அதிகாலை  விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொஸ்கமவைச் சேர்ந்த  48 வயது நபரே உயிரிழந்தவராவார். முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .