Kogilavani / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் போடைஸ் பிரதான வீதி, டிக்கோயா பட்டல்கலையில் வெள்ளிக்கிழமை(15) இரவு இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் எஸ்.கருணாகரன் நேற்று(16) உத்தரவிட்டார்.
சுப்ரமணியம் சுஜீவன் (வயது 19) என்பவருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீதியில் வெள்ளிக்கிழமை இரவு வேகக் கட்டுப்பாடை மீறி பயணித்த முச்சக்கர வண்டியில் மோதுண்டு சகோதர்களான இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்ததுடன் அவர்களில் எட்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தார். மற்றுமொருவர் கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பட்டல்கலை தோட்ட ஆலயத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியை கைதுசெய்த பொலிஸார், சனிக்கிழமை(16) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
மேற்படி இளைஞன் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago