2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கு நோக்கிச் சென்ற காரொன்று, ஹப்புதளை - பிளக்வூட்  தோட்டத்தில் இன்று(10) அதிகாலை 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் கணவன், மனைவி, மனைவியின் தந்தை ஆகியோரே காயமடைந்துள்ளதாகவும் இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .