2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விலைகளை காட்சிப்படுத்தாத முகாமையாளருக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 மே 03 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா  

கட்டுப்பாட்டு விலை குறிக்கப்படாமல் அரிசி மூடைகளை காட்சிப்படுத்தப்பட்டமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 'சதொச' நிறுவன முகாமையாளரைக் கடுமையாக எச்சரித்த, சியாம்பலாண்டுவை நீதவான் நீதிமன்ற நீதவான் நிலந்த விமலரட்ன, 10,000 ருபாய் அபராதம் விதித்து, நேற்றுச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

'சதொச' நிறுவன சியாம்பலாண்டுவை முகாமையாளருக்கே, மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எஸ். பத்மகுலசூரியவின் பணிப்பின் பேரில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர், சியாம்பலாண்டுவை நகர் வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்பு சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வகையில், சியாம்பலாண்டுவை 'சதொச' நிறுவனம் சோதனைக்குற்படுத்தப்பட்டபோதே, குறிப்பிட்ட அரிசிப் மூடைகளட கைப்பற்றப்பட்டதுடன், 'சதொச' நிறுவன முகாமையாளர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .