Sudharshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடமைப்பு திட்டத்துக்கான குடிநீர் விநியோகம், அண்மைக் காலமாக சீராக நடைபெறவில்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீடமைப்பு திட்டத்தின் கீழ் வசிக்கும் 25ற்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடுகின்றனர். இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் நீர் வாசிப்பு மானி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய மாதாந்த நீர்க் கட்டணத்தை மாத்திரம் தாம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையும் குடிநீர் விநியோகம் இடம்பெறவில்லை என்றும்; இம்மாதம் 4ஆம் திகதியிலிருந்து இதுவரையிலான காலப்பகுதி வரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.
வரட்சி காலத்தில் மட்டுமன்றி மழைக் காலங்களில் கூட இவ்வாறே குடிநீர் விதியோகத்தில் சிக்கல்கள் நிலவுவதாகவும் இது தொடர்பாக நுவரெலியா பிரதேச சபைக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் பல தடவை தெரிவித்த போதும் இதுவரை எந்தவொரு அதிகாரியும் தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
11 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago