2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வடிவேல் சுரேஷ் எம்.பி இ.தொ.கா.வுடன் இணைவாரா?

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் மிக முக்கியமான தொழிற்சங்கமாக அங்கம் வகிக்கின்றது. இச்சங்கத்தின் தலைவருக்கும்; இலங்கைத் தொழிலாளர் கங்கிரஸின் தலைவருக்குமிடையே புரிந்துணர்வும் இணக்கப்பாடுகளும் இருந்து வந்தன. ஆனால், தற்போது இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரீன் பெர்ணான்;டோவும் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸும் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்விருவரும், இ.தொ.கா தலைவர்களுடன் இணைந்து செயற்படுவார்களா என்பது சந்தேகமே' என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப்பொதுச் செயலாளர் இரா.சலோபராஜா தெரிவித்துள்ளார்.  'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக் கருதி, மூன்று தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' எனவும் அவர் கோரினார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், 'தொழிற்சங்கங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டொப்பந்தப் பேச்சில் ஈடுபடுவது அவசியமாகும். சம்பள உயர்வு தொடர்பான இழுபறி நிலை தவிர்க்கப்பட்டு, கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இது சகல தொழிற்சங்கங்களினதும்  எதிர்ப்பார்ப்பாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .