Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட ரக்காடு கிராமத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் பகுதிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதன்கிழமை (01) காலை 9 மணியளவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவலானது ரக்காடு கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, லக்ஷபான - வாழமலைப் பகுதியை ஒட்டிய பைன்ஸ் (Pine) மரங்கள் நிறைந்த வனப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
தீ பரவியதையடுத்து, நல்லதண்ணி பொலிஸார், ரக்காடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 6 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீப்பரவல் தொடர்பில் சந்தேகம் கொண்ட வனத்துறை அதிகாரிகள், லக்ஷபான வாழமலை பிரிவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செ.தி.பெருமாள்

4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago