Kogilavani / 2021 மார்ச் 03 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஷ்ணா
பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில், தொழிற்சங்கத்தின் உந்துதல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள தோட்டதுரைமார் சங்கம், கடந்த சில நாட்களாக தோட்ட முகாமையாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நீதியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
'தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரி ஹட்டன், மல்லியப்பு சந்தியில் நேற்று (3) காலை நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய துரைமார் சங்கத்தின் தலைவர்
தயால குமாரகே, அண்;மைக்காலமாக பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
'கொரோனா தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போதும் பெருந்தோட்ட துறையை பல சவால்களுக்கு மத்தியில் முகாமையாளர்களாகிய தாங்கள் முன்னெடுத்தோம். நாட்டுக்கு வருவாயை பெற்றுக்கொடுப்பதில் முகாமையாளர்களுக்கு பெரும் பங்களிப்பு உள்ளது.
'அதேபோன்று பண்டாரவளை, பூனாகலை, கந்தப்பளை பார்க் தோட்டம், ஓல்ட்டன் ஆகிய தோட்டங்களில், முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
'தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்கள் அல்லாத கொழும்பு பகுதிகளில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் குழுவினர்களாலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் தொழிற்சங்கங்கள்; இருப்பதாக அறிய முடிகிறது.
'தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நல்லதொரு சூழ்நிலை உருவாகினால் மாத்திரமே தொடர்ந்து பெருந்தோட்டத் துறையை சிறப்பாக முன்னெடுக்க முடியுமே தவிர வன்முறைகளால் அல்ல' என்றார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026