2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வயோதிபரை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

பதுளை மாநகரில் அநாதரவற்ற நிலையில் இருந்துவந்த வயோதிபரை, கைலகொட முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கமாறு, பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மரசிங்க, நேற்று உத்தரவிட்டதுடன், அவர் தொடர்பிலான முழுமையான விவரத்தை நீதிமன்றில் சமர்பிக்குமாறும் பதுளை பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.  

வீரன் கந்தையா என்ற வயோதிபரே, இவ்வாறு முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

பதுளை நகரில் நீண்டகாலமாக அநாதரவான நிலையில் இருந்த வந்த மேற்படி வயோதிபரை, பதுளை பொலிஸார் மீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.   

வயோதிபரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, அவரது பெயர் வீரன் கந்தையா என்பது தெரியவந்துள்ளது.  

கற்புல, செவிபுல குறைபாடுடைய மேற்படி வயோதிபரிடமிருந்து, அவரது உறவினர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .