2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையத்தில் தீ

Sudharshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ரஸ்மீன்

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இன்று (15) முற்பகல் 11 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில், குறித்த வர்த்தக நிலையத்தின் இரு மாடிகள் எரிந்து  சேதமாகியுள்ளன.

மேலும், இத்தீவிபத்தின் போது நகரில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்ததால், வர்த்தக நிலையத்திலிருந்த எரிவாயு அல்லது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் , பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்கள் பொதுமக்களின் உதவியுடன் அகற்றப்பட்ட போதிலும், முதலாம் இரண்டாம் மாடிகளிலிருந்த பொருட்களில் பெரும்பாலானவை எரிந்து சேதமாகியுள்ளன. அவை குறித்த சேத விவரங்கள்  இதுவரை மதிப்பீடப்பட வில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .