2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வலையில் சிக்குண்ட எட்டு அடி நீள சிறுத்தை

Kogilavani   / 2021 மார்ச் 24 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

அக்கரப்பத்தனை போபத்தலாவ மெனிக்பாலம் வெஸ்ட்பிரிவு பகுதியில், எட்டு அடி நீளமான சிறுத்தையொன்று, இன்று புதன்கிழமை வலையில் சிக்குண்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

வலையில் சிக்குண்டுள்ள சிறுத்தையைக் கண்ட பொதுமக்ககள் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தித் தெரியப்படுத்தியதை அடுத்து, அக்கரப்பத்தனை பொலிஸாரினூடாக நுவரெலியா வனவிலங்குத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள்,  இரந்தனிகல மிருக வைத்தியசாலையின் வைத்தியர்களை வரவழைத்து சிறுத்தையை உயிருடன் மீட்டுள்ளதுடன், இரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X