Janu / 2024 ஜூலை 28 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி- கினிகத்ஹேன பிரதான வீதி , மிப்பிட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று ஜீப் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவர் மற்றும் சாரதி பலத்த காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்ஹேன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் கினிகத்ஹேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஜீப் வண்டியை கவனக்குறைவாக செலுத்தியமை விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
மேலும், ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026