Janu / 2025 மார்ச் 30 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா சென்ற இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு சிறுவன் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவ பகுதியில் சனிக்கிழமை (29) மாலை நிகழ்ந்துள்ளது.
கொட்டாவ பிரதேசத்தில் இருந்து கிதுல்கல நோக்கி பயணித்த கார் நுவரெலியாவிலிருந்து வாதுவை நோக்கி எதிர் திசையில் பயணித்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொட்டாவையில் இருந்து கிதுல்கல நோக்கி சென்ற கார் சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் ராஜபக்ஷ


8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago