2026 ஜனவரி 21, புதன்கிழமை

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் திருட்டு

Kogilavani   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொட நகரில், இரவு வேளைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் செயற்பாட்டில்,  விசமிகள் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர் என்று, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக பஸ்களின் உதிரிப்பாகங்களே அதிகளவு திருடப்பட்டுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர்,  இப்பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து, இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில், 4 தனியார் பஸ்களின் கெசட்டுகள் திருடப்பட்டமைத் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசமிகள் விரைவில் கைதுசெய்யப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X