Editorial / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம் கிருஸ்ணா
பொகவந்தலாவ வானக்காடு தோட்டத்தில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, விரைவில் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உறுதியளித்துள்ளார்.
பொகவந்தலாவை வானக்காடு தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களை, இன்று (3) காலை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
பொகவந்தலாவை பகுதியில் மிகவும் பின்தள்ளப்பட்ட பிரதேசமான வானக்காடு, சிங்காரவத்தை பகுதிக்கு, 50 தனிவீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு, மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு உத்தேசித்திருந்ததாகவும் எனினும் தீ விபத்தினால் வீடுகளை இழந்துள்ள குடும்பங்களின் அவசரத் தேவை கருதி, 13 வீடுகளுடன் அதே தோட்டத்தில் தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கும் மக்களுகளுக்குமாக சேர்த்து, 25 தனி வீடுகளை அமைத்தக்கொடுப்பதற்கு, அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளாரென்றும் இதன்போது தெரிவித்தார்.



8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago