Kogilavani / 2021 மார்ச் 21 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
அக்குறணை முஸ்லிம் பெண்கள் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான முன்வாயல் கதவு திறப்பு விழா, பாடசாலை அதிபர் சுஹீரா சித்தீக் தலைமையில், நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவில், மேற்படி வாயிற் கதவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் ஒரு தசாப்த காலமாக அதிபராகக் கடமையாற்றிய ரிஹானா செயின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வாயிற் கதவை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், அக்குறணை பிரதேசசபை உறுப்பினர் எம்.ஏ.எச்.எம்.சவ்ராஜ், பிரதி அதிபர் ஏ.ஆர்.ஹம்சா, பழைய மாணவர் சங்கச் செயலாளர் எம்.ஐ.எப்.சியானா இஸ்மாயீல், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எஸ்.ஏ.எம்.பைரோஸ், ஆசிரியரகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026