Kogilavani / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி - கட்டுகஸ்தோட்டை குருநாகல் வீதியில், நேற்று முன்தினம் (22) இரவு, காரொன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள், ஓட்டோ, கார் என்பவற்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரின் சாரதி மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026