Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்டம் 50 ஏக்கர் பிரிவிலுள்ள முன்பள்ளி பாடசாலைக்கு, சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், மஸ்கெலியாவிலிருந்து சாமிமலைக்கு சென்ற முச்சக்கர வண்டியும் ப்ரௌன்ஸ்வீக் தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக, இன்றுக் காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக, மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் நதீஸ் (வயது 5), பாலகிருஷ்ணன் தசான் (வயது 2) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .