Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், நேற்று (27) வழங்கப்பட்டன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியின் நானுஓயா பிரதேச இளைஞர்களுக்கான கூட்டம், நானுஓயா மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச இளைஞர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக, மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களை, கிரிக்கெட் கடினப்பந்து விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளரும் இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த், பொதுச்செயலாளர் அர்ஜூன், நுவரெலியா கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் ஜகத் ஜயசுந்தர, இலங்கை தேசிய கரப்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வர்த்தகர் திருச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026