2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் ,சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .