2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டை உடைத்து ​ நுழைந்தவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்- பன்மூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி,உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டமைத்  தொடர்பில், நபரொவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம்  நேற்று முன்தினம் (3) இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரால் திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட சில பொருள்கள், வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X