Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
R.Maheshwary / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை- ஹொலிரூட் மேற்பிரிவு தோட்டத்தில் பழமை வாய்ந்த மரம் ஒன்றினை தோட்ட நிர்வாகமும் பொது மக்களும் இணைந்து வெட்ட முற்பட்டபோது அம்மரம் உடைந்து, தோட்ட குடியிருப்புகளின் மீது விழுந்ததில் மூன்று வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
குறித்த மரம் குடியிருப்புகள் மீது விழும் அபாயம் தோன்றியதால் தோட்ட நிர்வாகமும், தோட்டத் தொழிலாளர்களும் அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதற்கிணங்க க வௌ்ளிக்கிழமை (16) மாலை அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது, குறித் மரம் உடைந்து தோட்ட குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது.
மரம் வெட்டும் போது குறித்த குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டமையால், எவருக்கும் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை.
ஆனால் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
அக்குடியிருப்புகளில் வசித்து வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்து, தற்போது அத்தோட்ட வாசிகசாலை மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த தோட்ட குடியிருப்புகள் தோட்ட நிர்வாகத்தின் செலவில் புனரமைக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago