Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கிருஷ்ணா
வெதுப்பக உணவு பொருட்களை விற்பனை செய்து வந்த நபர், கஞ்சா கலந்த போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபில விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஹத்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெதுப்பக உணவு பொருட்களை பொகவந்தலாவை, நோட்டன், டயகம உட்பட பல பிரதேசங்களுக்கு தனது லொரியில் சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இவ்வாறு விற்பனை செய்பவர், கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக நோர்ட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த லொரி, வெதுப்பக பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹட்டனை நோக்கிச் சென்ற போது பொலிஸாரால் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதன் போது குறித்த லொரியில் இருந்து 250 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் ஒவ்வொரு மாத்திரையும் 200 ரூபாய் பெறுமதியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
39 minute ago