Kogilavani / 2021 மார்ச் 21 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிராஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, தெல்தெனிய பிரதேசத்தின் தோட்டக் காணிகளை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கும் முயற்சியை, ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் மெததும்பர பிரதேச சபை உறுப்பினர் அன்டன் ஜேசு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், தெல்தெனிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ரங்களை பிரதேசத்தின் கல்தூரியா தோட்டப் பிரிவின் 100 ஏக்கர் காணி, மெத-தும்பர பகுதியின் வுட்சைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணி என்பவற்றை வெளியாருக்கு பகிர்ந்து வழங்க, பிரஜாசக்தியூடாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
'தோட்ட் காணிகளை வெளியாருக்குப் பகிர்ந்தளிப்பதை தடுத்து நிறுத்த நாம் ஒன்றிணைத்துச் செயற்பட வேண்டும். ஓர் அங்குல தோட்ட நிலத்தையேனும் வெளியாருக்கு வழங்க இடமளிக்கக் கூடாது. கடந்த அரசாங்கத்தில் நாம், தோட்ட காணிகளை வெளியார் பெற முடியாத வகையில் பாதுகாத்தோம். அதே வேலை, தோட்டத்தில் வாழ்கின்ற எமது மக்களின் வீடமைப்புத் தேவைக்கு காணிகள் பகிர்ந்து வழங்கினோம். பயிரடப்படாத காணிகளை எமது தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தோம். ஆனால், அவற்றை இன்று சிலர், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து, எமது பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, தமது நலனுக்காக வெளியாருக்கு பகிர்ந்து கொடுக்க முயற்சிக்கின்றனர்' எனச் சாடினார்.
'அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த பார்க்காதீர்கள் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன். தோட்ட மக்களுக்கான, அவர்களை சுய விவசாயிகளாகக் கட்டி எழுப்புவதற்கான, காணிகள் பெற்றுக்கொடுக்கும் வரை, தோட்டக் காணிகளை அபகரிக்க இடமளிக்க மாட்டோம். அவ்வாறு முயற்சிப்பவர்களுக்கு மக்களோடு இணைந்து தகுந்த பாடம் புகட்டுவோம்' என குறிப்பிட்டார்.
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026