Editorial / 2020 ஜூன் 02 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம், எம்.கிருஸ்ணா
கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, மூன்று வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் 9 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவண்டன் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலைப் பிரிவிலுள்ள லயன் குடியிறுப்பே, நேற்று (01) இரவு, தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அயலவர்கள் விரைந்து செயற்பட்டமையால், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரக் கோளாரே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்றும் இதனால், ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என்றும் இரண்டு வீடுகள் பகுதியளவில் எரிந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து காரணமாக, உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வீட்டிலுள்ள அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தீக்கிரையாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உலருணவு பொருள்களை கொத்மலை பிரதேச செயலகத்தினூடாக வழங்கியுள்ளதுடன் ட்ரட்ஸ் நிருவனத்தினூடாக கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago