2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹங்கமுவ ஆற்றில் முதலைகள்

Gavitha   / 2021 மார்ச் 01 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நிவித்திகல ஹங்கமுவ கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தின் பின்னர், இரண்டு முதலைகள் சஞ்சரித்துள்ளதாகவும் எனவே ஆற்றில் இறங்கி நீராடுவதற்கு பிரதேச மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபகாலமாக இந்த ஆற்றில் இந்த இரண்டு முதலைகளும் சஞ்சரித்து வருவதாகவும் இந்த விடயம் பிரதேச மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அனைவரும்  அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இவ்விடயம் சரணாலயங்களுக்கும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இரத்தினபுரி வனப் பரிபாலன காரியாலங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் எனினும், எந்தவொரு அதிகாரிகளும் இவற்றை பிடித்து வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று விடுவதற்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்பிரதேசத்திலுள்ள மக்களில் பெரும்பாலோனோர், இந்த ஆற்றிலேயே நீராடுவதால், இந்தப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் எனவே, அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .