2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் முதல் நோர்வூட் வரை மூன்றடுக்குப் பாதுகாப்பு

Kogilavani   / 2017 மே 12 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், டி.ஷங்கீதன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, ஹட்டன், டிக்கோயா-கிளங்கன் மற்றும் நோர்வூட்டில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹட்டன் முதல் நோர்வூட் வரையிலும் சுமார் 2,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.   

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 39 பொலிஸ் டிவிசனைச் சேர்ந்த பொலிஸார், நேற்று (11) காலை முதல், கடமையில் இருந்தனர்.  
ஹட்டன் டன்பார், ஹைலன்ட்ஸ் கல்லூரி, டிக்கோயா-தரவளை ஆகிய மைதானங்கள் என்பவற்றிலும், ஹட்டன் நகரிலிருந்து நோர்வூட் விளையாட்டு மைதானம் செல்லும் பிரதான வீதியிலும், சீருடை தரித்த பொலிஸார் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.  

2 பிரதி பொலிஸ்மா அதிபர்கள், 2 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், 25 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோர் தலைமையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, ஹட்டன்- மஸ்கெலியா, பொகவந்தலாவை-ஹட்டன், இருவழிப் போக்குவரத்து, இன்று (12) காலை 9 மணியுடன் நிறுத்தப்படும் என்று ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

இந்திய ஹெலிகளும் இலங்கை ஹெலிகளும்  இந்திய ஹெலிகள் நான்கும், இலங்கை ஹெலிகள் நான்கும், ஹட்டன் வான்பரப்பில் இன்று (12) வட்டமிடவிருக்கின்றன.  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடைய பாதுகாப்பு பிரிவினரும் வருகைதரும் இந்திய ஹெலிகொப்டர்கள் நான்கும், ஹட்டன் டன்பார் மைதானத்தில் தரையிறங்கும்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தருகின்ற இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரும் பாதுகாப்புக்காக வரும் ஹெலிகொப்டரும், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கும்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தருகின்ற ஹெலிகொப்டரும், பாதுகாப்புக்காக வரும் ஹெலிகொப்டரும் டிக்கோயா-தரவளை விளையாட்டு மைதானத்தில் தரையிறக்கப்படும்.  

அதன்பின்னர், விசேட வாகன பேரணிகளில், மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பர். அதன் பின்னர். நோர்வூட் பொது மைதானத்துக்கு செல்வர்.   

மேலே குறிப்பிட்ட பிரதான வீதிகள் காலை 9 மணியுடன் மூடப்படும். அதற்கு முன்பதாக பொது மக்கள் நோர்வூட் விளையாட்டு மைதானத்துக்கு வருகை தர வேண்டும்.  

டிக்கோயா-கிளங்கன் மற்றும் நோர்வூட் பிரதான மைதானத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் நிறைவடைந்து, விசேட பிரமுகர்களின் ஹெலிகொப்டர்கள் புறப்பட்டதன் பின்னரே, வீதிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மோடியின் வருகையையொட்டி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிரதான மேடைக்கு பிரதம அதிதிகள் காலை 11.30 மணிக்கு வருகை தருவார்கள் எனத் தெரியவருகின்றது.  

ஹட்டன், நூரளைக்கு இன்று விடுமுறை  நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள சகல தமிழ் மொழிமூலமான பாடசாலைகளையும் இன்றைய தினம் (12ஆம் திகதி) மூடப்படுமென, நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச, தெரிவித்துள்ளார்.  

நோர்வூட் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வில் கலந்துக்கொள்ள பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக, இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.  
இன்றையதினம் மூடப்பட்டிருக்கும் தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளும், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .