Editorial / 2020 மே 05 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரில், நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு, ஹட்டன் நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, ஹட்டன் நகரில் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் பொதுசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் பாவனைக்கு உதவாத பொருள்களை விற்பனை செய்து வருவதாகவும், ஹட்டன் நகரசபையின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹட்டன் நகரில், திடீர் சோதனைகளை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்கள், நடைபாதை வியாபாரிகளையும் எச்சரித்துள்ளனர்.
நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும்போது நிலத்திலிருந்து ஒன்றறை அடி உயரத்தில், பலகையிலான தட்டு அல்லது பொலித்தின் விரிப்புகளை விரித்தே, பொருள்களை விற்பனைக்கு வைக்க வேண்டும் என்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு, பொதுசுகாதார பரிசோதர்கள் அறிவுறுத்தினார்.
அத்துடன் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களை, முறையாகப் பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago