2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஹட்டன் நகரில் சில வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Kogilavani   / 2020 நவம்பர் 09 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

ஹட்டன் நகரில், பொதுசுகாதார விதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சில வியாபார நிலையங்கள், மூடப்பட்டுள்ளன.

அம்பகமுவ பிரதேச கொவிட் 19 பாதுகாப்பு விசேட வைத்திய அதிகாரிகள், ஹட்டன் நகரில் இன்று (9) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன்போது சில விற்றனை நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மிகவும் மோசமாக சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன என்று, சுகாதார வைத்திய அதிகாரி சிஷான் பேமசிறி தெரிவித்தார்.

மேலும் விற்பனை நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட உணவு பொருள்கள் அழிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .