Kogilavani / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், பஸ்களில் அதிகளவு பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர் என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதிகளவான நெறிசலுடனேயே பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளதாக, பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, போடைஸ், சாஞ்சிமலை, அப்கட், வெலிஓயா ஆகிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களே, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்றனர் என்று, குற்றஞ்சாட்டப்படுகிறது.
பொகவந்தலாவை உள்ளிட்டப் பகுதிகளில், அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில், பொதுசுகாதார பரிசோதகர்களும் ஈடுபட வேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026