Kogilavani / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா, நடராஜா மலர்வேந்தன்
ஹப்புத்தளை நகரிலுள்ள வியாபார நிலையங்கள், நேற்று முன்தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்தே, திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பலசரக்குக்கடைகள், தேங்காய் எண்ணெய் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தேங்காயெண்ணெய்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அதன் மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்த எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், வியாபார நிலையங்களில் இந்த எண்ணெய் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதுத் தொடர்பில் ஆராய்ந்துப் பார்ப்பதற்காகவே, இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago