Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “மக்களுக்கான அரச சேவை” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவை, எதிர்வரும் 17ஆம் திகதி ஹப்புத்தளையில் நடைபெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையானது, நாட்டில் மேற்கொள்ளப்படும். 13 ஆவது நிகழ்வாகும்.
அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ஆணைக்குழு, பிறப்பு, இறப்பு பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஊழியர் சேமலாப நிதி அலுவலகம், ஓய்வூதிய திணைக்களம், பொலிஸ் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, சட்ட உதவி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு, கமநல சேவைகள் திணைக்களம், மின்சாரத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மேற்படி நடமாடும் சேவையில் ஈடுபட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவர்.
இதன்போது, பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை சட்ட ரீதியாக மொழிபெயர்த்துக் கொடுத்தல், பிறப்புச் சான்றிதழின் பிழைகள் இருப்பின் அவற்றைத் திருத்திக்கொடுத்தல், பிறப்புச் சான்றிதழின் புதியப் பிரதியை வழங்கல், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமானச் சான்றிதழ் வழங்கல், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஊழியர் சேமலாபம் தொடர்பான விசாரணைகள், கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், விவாகமாகாத தம்பதியினருக்கு சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கல், சட்ட உதவிகள், சிறைச்சாலை கைதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு, ஓய்வூதியம் குறித்த விடயங்களுக்குத் தீர்வு, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு, அரச காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
ஹப்புத்தளையில் நடைபெறும் இந்நடமாடும் சேவையைத் தொடர்ந்து, பதுளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், இது போன்ற நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ளதாக, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஊவா மாகாண இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ . அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago