2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஜனனம் அறக்கட்டளை, IDM இணைந்து 11.12.13இல் சமூக சேவை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 13 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனனம் அறக்கட்டளை நிறுவகமும், இலங்கையின் முன்னணி தனியார் கல்வி நிறுவனமுமான IDM City Campus #3 நிறுவனத்தின் மாணவர்களும் இணைந்து 11.12.13 அன்று, தேவைகள் அதிகமாகக் காணப்பட்ட ஆதரவற்றோர் நிலையங்களுக்குத் தங்களது உதவிகளை வழங்கினர்.
 
11.12.13 என்ற விசேட தினத்தில் ஜனனம் அறக்கட்டளையும், IDM City Campus #3 இன் விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து 3 ஆதரவற்றோரின் இல்லங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.
 
மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் 3 குழுக்களாகப் பிரிந்து இரத்மலானையிலுள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லமான சக்தி இல்லம், மொறட்டுவையிலுள்ள மனநலம் குன்றிய பெண்களுக்கான ஆதரவற்றோர் நிலையமான பாலிகா நிவாச இல்லம், விசேட தேவைகளுக்குரியோருக்கான கல்கிசையிலுள்ள சேர் ஜேம்ஸ் பீரிஸ், லேடி பீரிஸ் ஆகிய இல்லங்களுக்கு விஜயம் செய்தனர்.
 
இதில், ஜனனம் அறக்கட்டளை வழங்கிய பணத்தின் உதவியுடனும், மாணவர்கள், விரிவுரையாளர்கள் தங்களின் தனிப்பட்ட பங்களிப்புகளுடனும் அவ்வில்லங்களுக்குரிய உதவிப் பொருட்களை வழங்கியதோடு, அங்கிருந்தோருடன் தங்களுடைய நேரத்தைச் செலவழித்து அவர்களுக்கான மகிழ்ச்சியையும் வழங்கியிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .