2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

17 ஆவது சர்வதேச மீனவர் தினம்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்     
  

17 ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வு நீர்கொழும்பு ருக்மணி தேவி அரங்கில் நேற்று வியாழக்கிழமை (21)  இடம்பெற்றது.

'வானம், பூமி, நீர் போன்றன அதில் தங்கி வாழும் சகல உயிரினங்களுக்கும் சொந்தமானவையாகும். அதன் உரிமையை உறுதி செய்வோம் 'என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையனோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் முறையற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக விவசாய மற்றும் மீனவ இடங்கள் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இல்லாமற் போவதாகவும், நாட்டின் காடுகள் அழிக்கப்படுவதாகவும் அங்கு நிகழ்த்தபட்ட உரைகளின் போது சுட்டிக்காட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .