Suganthini Ratnam / 2011 ஜூன் 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர, குசுல் சமத்)
கரகம்பிட்டிய - ஹெட்டியாவத்த, பத்தரமுல்ல - தெஹிவளை, கல்கிசை - புறக்கோட்டை, அங்குலான – கிரிபத்கொடை ஆகிய பாதைகளில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்கள் நேற்று முதல் நடக்கும் காலி வீதி பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் இன்று இணையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை நடந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடருமென தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுகத் ரத்னாயக்க கூறினார்.
பாணந்துறை - கொழும்பு வீதியில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்கள் கிடைக்காததால் பெரிதும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.
கடும் காயங்களுக்குள்ளான தனியார் பஸ் சாரதி பாணந்துறை வைத்தியசாலையிலிருந்து களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேல்மாகாண போக்குவரத்து அமைச்சர் உபாலி கொடிகார, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தனியாக பஸ் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரத்மலானை பஸ் டிப்போவை சேர்ந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் விடுவிக்கப்பட்டனர் என்பதை தனியார் பஸ் ஊழியர்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago