Super User / 2011 ஜூன் 10 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள், உணவுப் பண்டங்களை கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்படுவதாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கடந்த சில தினங்களாக கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட செல்லும் தமது உறவினர்கள் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களை கைதிகளிடம் ஒப்படைப் பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசியல் கைதிகளின் உறவினர்களால் காணாமல் போனோரை தேடியறியும் குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் போசகர் கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ன மூலம் சிறைச்சாலை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் விளக்கமளிக்கையில் உணவுப் பொருட்கள் மூலமாக போதை வஸ்துப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதால் அதை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தமிழ் அரசியல் கைதிகளிடமும் இத்தகைய நடைமுறைமேற்கொள்ளப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
அதையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை மேற்கொள்வதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். எனவே அரசியல் கைதிகள் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பாக எமக்கு அறியக்கிடைத்தால் அவற்றிற்கான தீர்வை பெற்றுத்தர நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்."
39 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago