Super User / 2011 ஜூன் 13 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நால்வர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.
இம்மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறினார். "ஒரு மாணவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் மிரிஹான பொலிஸில் 48 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனிடம் கேட்டபோது, இம்மாணவர்கள் பகிடிவதை மற்றும் பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைத்தமை தொடர்பான சம்பவங்கள் காரணமாக உபவேந்தர் கலாநிதி என்.எல்.ஏ. கருணாரட்வினால் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். (LD and SD)
42 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
IBNU ABOO Tuesday, 14 June 2011 02:40 AM
ஏற்கனவே அரசுக்கு எதிராக சதி செய்தவர் அரச விருந்தாளியாக இருக்கிறாரே . அவரை விடவுமா இவர்கள் சதி செய்துவிட்டார்கள் ;நல்ல ஜோக் தான் போங்கள்.
Reply : 0 0
Zihan Wednesday, 15 June 2011 12:21 AM
மீனவர்கள் மாணவர்கள் ஆனமைக்கு நன்றி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago