Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசுக்கு எதிராக சதிசெய்த குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இம்மாணவர்களிடம் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 30 நாட்களுக்கு அவர்களை தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதகாவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்சீவ பண்டார தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
எனினும் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தேசபந்து தென்னகோன் கேட்டபோது, இம்மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார். அத்துடன் விசாரணைக்காக அவர்களை மேலும் ஒரு வாரகாலம் தடுத்துவைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
nadodi Thursday, 16 June 2011 07:55 PM
அவர்களது மருந்தின் சுவையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago