Super User / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
நவீன தொழிநுட்பங்களை கொண்ட நீதிமன்ற கட்டிட தொகுதி கொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதற்காக தற்போதுள்ள நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு அருகில் பீ.சி.சிக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் நிர்மாண பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடையில் தற்போதுள்ள நீதிமன்ற கட்டிட தொகுதி புனரமைக்கப்படவுள்ளதுடன், நீதிபதிகளுக்கான பயிற்சி நிலையம், நீதிபதிகளுக்கான வதிவிடம் என்பன அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .