Super User / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா )
சட்டவிரோதமான முறையில் கடல் ஆமை இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி சிறில் பெர்னாந்து தெரிவித்தார்.
நீர்கொழும்பு ,அலஸ் வீதியை சேர்ந்த கல்பகே சிசில் அப்புஹாமி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
இவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கிராம் நிறை கொண்ட கடல் ஆமைகளின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது .
சந்தேகநபர் நீர்கொழும்பு கடற்கரைத்தெரு - சூரிய வீதி பகுதியில் ஆமைகளின் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .